பாலஸ்தீன் அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வருகை

331 0

நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் அதிபர் முகம்மது அப்பாஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச இருக்கிறார்.

பாலஸ்தீன் அதிபராக உள்ள முகம்மது அப்பாஸ் 4 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு வந்திறங்கிய அவரை இந்திய வெளியுறவு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த முகம்மது அப்பாஸை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி கைக்குலுக்கி வரவேற்றனர். பின்னர், அவருக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய வீரர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட அப்பாஸ் ஜனாதிபதி பிரானாப் முகர்ஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார். இதையடுத்து, பிரதமர் மோடியை சந்திக்கும் அப்பாஸ், பொருளாதாரம், தீவிரவாதம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் மோடி அடுத்த மாதம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், பாலஸ்தீன அதிபரின் இந்த இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.