அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் விபரம் 2022-2024 காலப்பகுதி தரவுகள் இல்லை

37 0

 2015  முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படு கொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள், அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் இல்லாத காரணத்தால் வினவப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான்,

2015 முதல் 2015  முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள் அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிப் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை என்ன?

அவற்றில் இன்றளவில் நிறைவடைந்துள்ள வழக்கு விசாரணைகளின்  எண்ணிக்கை என்ன,அவ்வழக்குகள் யாவை,வழக்குகளில் சட்டத்துறை தலைமையதிபதியினால் மீளப்பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது தொடர்பில் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்வைக்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ஏனெனில்  2015  முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படு கொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள் , அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தரவுகளும் கிடையாது.

சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போது அரசியல்வாதிகள், அரச அலுவவர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. அது தவறானது. பொதுவான நிரல்படுத்தலே குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது என்றார்.