மின்சாரசபை கூறுபடுவதை தடுக்கவே புதிய சட்டமூலம் – மஹிந்த ஜயசிங்க

45 0

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொண்டு வந்த மின்சார சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பல்வேறு பகுதியாக கூறுபடுத்தப்படும். இதனை தடுக்கும் வகையில் தான் புதிய திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரமாக குறைக்கும் சூழலே காணப்பட்டது. புதிய சட்டமூலத்தில் மின்சார சபையின் சகல ஊழியர்களின் தொழில் உ ரிமைகள் பாதுகாக்கப்படுமென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின்சாரத்துறை தொடர்பில் கடந்த காலங்களில் கொண்டு வந்த சட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. 2002 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மின்சாரத்துறை தொடர்பான சட்டமூலங்களை எதிர்த்ததால் தான் மின்சார சபையின் தனியுரிமை பாதுகாக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையை 12 நிறுவனங்களாக கூறுப்படுத்தும் வகையில் சட்டமூலத்தை கொண்டு வந்தார் .இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.இருப்பினும் அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சன விஜேசேகர கொண்டு வந்த மின்சார சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பல்வேறு பகுதியாக கூறுப்படுத்தப்படும்.இதனை தடுக்கும் வகையில் தான் புதிய திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரமாக குறைக்கும் சூழலே காணப்பட்டது. புதிய சட்டமூலத்தில் மின்சார சபையின் சகல ஊழியர்களின் தொழில் உ ரிமைகள் பாதுகாக்கப்படும். இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் இலங்கை மின்சார சபையில் அதிகளவில் உள்ளார்கள்.அனைத்து ஊழியர்களின் தொழில் உரிமைகளையும் நாங்கள் பாதுகாப்போம்.

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவது தொடர்பில் கொண்டு வந்த பிரேரணைக்கு நாமல் ராஜபக்ஷ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். நாமல் ராஜபக்சூ உட்பட பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் 30 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.காஞ்சன விஜேசேகர அன்று கொண்டு வந்த மின்சார சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அச்சட்டத்தை ஆதரித்து பேசுகிறார்கள்.இவர்களின் இரட்டை வேடம் இவ்வாறானதே என்றார்.