காசாவில் உள்ள பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடத்தில் தீ மூண்டுள்ளது என தெரிவித்துள்ள செம்பிறை சமூகம் கான் யூனிசில் உள்ள தனது கட்டிடத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே தாக்கியதாக தெரிவித்துள்ளது.
எங்கள் தலைமையகம் என்பது இஸ்ரேலிற்கு நன்கு தெரியும் என பாலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டிடம் தீப்பிடித்து எரிவதையும் புகைமண்டலம் காணப்படுவதையும் வெளியிட்டுள்ள செம்பிறை சங்கம்கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் இரத்;தக்கறை காணப்படுவதையும் காண்பிக்கும் படங்களையும் வெளியிட்டுள்ளது.
ஒமார் இஸ்லீம் என்பவர் கொல்லப்பட்டுள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

