வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைப்பு

47 0

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அவசர அவசியத்தினை கவனத்தில் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பா.ஸ்ரீதரன், க கஜகரன், மற்றும் ஆர்.சுகீர்த்தனா ஆகியோரின் கூட்டு முயற்சியினால் இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.