கண்டியில் திடீரென தீப்பற்றி எரிந்த இ.போ.ச பஸ்!

63 0

கண்டி – அட்டபாகே பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் உள்ள சக்கரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சக்கரங்களே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளன.

இதன்போது பஸ்ஸில் 45 பேர் இருந்துள்ள நிலையில், பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீப்பரலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.