தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுமக்கள் அவர்களுக்கான சேவைகளைப் பெற பாராளுமன்ற உறுப்பினர்களைப் பின்தொடர வேண்டியதில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
Know Your Neethi “உங்கள் நீதியை அறிந்து கொள்ளுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் சட்ட உதவி வழங்குவது மற்றும் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது நாளில் இன்று (02) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

