பிரான்சில் கால்நடைகளிடையே பரவும் வைரஸ் தொற்று: கொல்லப்படும் ஆயிரக்கணக்கான விலங்குகள்

68 0

பிரான்சில் கால்நடைகளிடையே வைரஸ் தொற்று ஒன்று பரவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்பட்டுவருகின்றன.

பிரான்சில் கால்நடைகளைத் தாக்கும் lumpy skin disease என்னும் வைரஸ் தொற்று பரவிவருகிறது.

நாட்டில் 51 இடங்களில் இந்த வைரஸ் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1,000 விலங்குகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Lumpy skin disease என்பது, பூச்சிகள் கடிப்பதால் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும்.

 

இந்த தொற்று ஏற்பட்டால், கால்நடைகள் உடலில் கொப்புளங்கள் ஏற்படுவதுடன், பால் உற்பத்தியும் குறையும். இந்த தொற்று மனிதர்களுக்குப் பரவாது என்றாலும், வர்த்தகத் தடைகளுக்கும் பொருளாதார இழப்புக்கும் அது வழிவகுக்கும்.

இந்நிலையில், ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு, வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களில் இதுவரை சுமார் 100,000 பசுக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது.