செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்: இரண்டாம் கட்டம் 27வது நாளாக தொடர்கிறது

70 0

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளானது இரண்டாவது கட்டத்தின் 27வது நாள் ஆகிய வெள்ளிக்கிழமை (01) நீதிவான் ஏ.ஈ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை (01) புதிதாக நான்கு மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 122 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றையதினம் 7 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுவரை மொத்தமாக 112 மனித எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்த எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலினுள் வைக்கப்பட்டுள்ளன.