யாழ். செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிட தீர்மானம்

70 0

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு  தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளையும்  மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர் என தெரிவித்தார்.