தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி

86 0

காலியில் ஹிக்கடுவை, தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை (31) இரவு 09.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், மீனவர் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த மீனவர் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளதால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மீனவர் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பல தடவைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிதாரிகள் காலி வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.