2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் 3,022 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இலஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 34 பேரில் 10 பொலிஸ் அதிகாரிகளும், 6 சிவில் அலுவலர்களும், நீதி அமைச்சில் கடமையாற்றும் 5 அதிகாரிகளும், சுகாதார அமைச்சில் கடமையாற்றும் 2 அதிகாரிகளும் இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் 2 அதிகாரிகளும் காணப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் 60 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

