காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் உயிரிழப்பு!

50 0

அநுராதபுரம் – கல்னேவ, சியம்பலன்கம பகுதியில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் சேனபுர பகுதியை வசிப்பிடமாக கொண்ட 44 வயதுடைய சிப்பாய் ஆவார்.

கல்னேவ நெகம்பஹா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்சார வேலி பாதுகாப்பு கடமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.