ரஸ்யாவை மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ( 8.7) உலுக்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி தாக்கலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் கிழக்கு ரஷ்யாவில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு தென்கிழக்கே 85 மைல்கள் (136 கிமீ) தொலைவில்பூகம்பம் மையம்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமச்சட்காவில் மூன்று அடிக்கும் மேலான அலைகள் பதிவாகியுள்ளன என ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசுபிக்கடலோர பகுதியில் 3 அடி அலைகளை எதிர்பார்ப்பதாகவும் பொதுமக்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
ரஸ்யா அமெரிக்காவின் மேற்குகரையோரமான அலாஸ்கா,கலிபோர்னியா ஹவாய் குவாம் போன்றவற்றிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சேதம் குறித்து எந்த விபரமும் வெளியாகவில்லை
ஹவாயின் வடமேற்கு கடற்கரைகளிலும் ரஷ்யாவிலும் 3 மீட்டருக்கும் அதிகமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் என்ற சிறிய நகரத்தில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு கூறப்படுகிறார்கள்.
கம்சட்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் “பல தசாப்தங்களில் மிகவும் வலிமையானது” என்று பிராந்திய ஆளுநர் கூறினார் ஏனெனில் களை கடற்கரைப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
“சுனாமிகள் மீண்டும் மீண்டும் தாக்கும்” என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்தது மற்றும் “எச்சரிக்கை நீக்கப்படும் வரை கடலுக்குள் நுழையவோ அல்லது கடற்கரையை நெருங்கவோ வேண்டாம்” என்று குடியிருப்பாளர்களிடம் கூறியது.

