கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் தலைவரும், மகப்பேற்றியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணரரான ஜயங்க திலகரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சரிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது கடிதத்தை சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்திய நிபுணரரான ஜயங்க திலகரத்ன 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, இந்த நியமனம் அரசியல் நோக்கம் கொண்டது என வைத்தியத்துறையினர் விமர்சித்தனர்.
வைத்தியர் திலகரத்ன தம்புள்ளையில் உள்ள மாவட்ட அடிப்படை வைத்தியசாலையில் புதிய மகப்பேறு வைத்தியராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

