குருணாகலில் லொறி மோதி ஒருவர் பலி ; சாரதி கைது!

59 0

குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யன்தம்பலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி ஒன்று வீதியில் பயணித்த நபரொருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து லொறியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.