மருதானை பொலிஸ் நிலையத்தின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

83 0

கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்பை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்தே, 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தகர்.