அமெரிக்காவில் விமானத்தில் தீ விபத்து

80 0

அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்துள்ளது.

மியாமிக்கு புறப்படவிருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதில், அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.