யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வியாழக்கிழமை (24) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்தி விட்டு, வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.
பின்னர் இவர் வெள்ளிக்கிழமை (25) அதிகாலை உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

