பயங்கர குற்றவாளிகளை உச்சகட்ட பாதுகாப்புச் சிறைக்கு மாற்றிய பிரான்ஸ்

70 0

பிரான்ஸ் அரசு, பயங்கர போதைக்கடத்தல் குற்றவாளிகள் சிலரை, உச்சகட்ட பாதுகாப்புடைய சிறை ஒன்றிற்கு மாற்றியுள்ளது.

நாட்டிலுள்ள பயங்கர குற்றவாளிகளில் 17 போதைக் கடத்தல் குற்றவாளிகள், Vendin-le-Vieil என்னுமிடத்திலுள்ள உச்சகட்ட பாதுகாப்புச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என நீதித்துறை அமைச்சரான ஜெரால்ட் டார்மனின் தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்தக் குற்றவாளிகள் சிறையிலிருந்தாலும், தங்கள் பண பலத்தைப் பயன்படுத்தி போதைக்கடத்தல் மற்றும் கொலைக்குற்றங்களை தொடர அவர்களால் முடியும்.

 

ஆக, புதிய சிறையில், அவர்கள் தங்களைக் காணவருபவர்களை தொடமுடியாத வகையில் குற்றவாளிக்கும் அவரைக் காணவருபவர்களுக்கும் இடையில் கண்ணாடித்திரை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எந்த பொருட்களையும் மறைத்துவைத்து சிறைக்குள் கொண்டுவர முடியாத வகையில், விமான நிலையங்களில் உள்ளதுபோல, ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படி, புதிய சிறை, பழைய பயங்கர குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைத் தொடரமுடியாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.