இந்தியாவில் பாடசாலை மேற்கூரை இடிந்து விபத்து ; 7 மாணவர்கள் உயிரிழப்பு

92 0

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25)  காலைபாடசாலை ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாடசாலை வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை  கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.