சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

82 0

உண்மைக்கும் நீதிக்குமான  இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உள்ளகபொறிமுறை குறித்து நம்பிக்கையில்லை சர்வதேச பொறிமுறையையே நாங்கள் வேண்டிநிற்கின்றோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக நாளை வடக்குகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்குகிழக்கின் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கை விஜயத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் வடக்குகிழக்கின் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் மெய்நிகர் கலந்துரையாடலில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது

ஏன் தற்போது இந்த போராட்டம் என்ற கேள்வி எழக்கூடும்.

2009 இல் தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அழிப்பிற்கு வன்முறை கொலை பாலியல்வன்முறை போன்றவற்றிற்கு பலவழிகளில் நீதி கோரி தமிழனம் தோற்றுப்போயுள்ளது.

இந்த அடிப்படையில் சர்வதேசநீதியை கோரிநிற்கின்றோம்.

செம்மணி மீண்டுமொருமுறை சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் மறை முயல்கின்றது என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

அப்படியாயின் நீதியான விசாரணைகள் நடப்பது சாத்தியமில்லை.

தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் பல விசாரணைகளில் ஆஜராகியிருந்தார்கள்ஆனால்எந்த பொறிமுறையும் நம்பகதன்மை மிக்கதாக அமையவில்லை.

ஐநா மனித உரிமையாளர் இலங்கை வருகின்றார் என்றவுடன் இந்தவிடயம் உரத்துப்பேசப்பட்டது.தமிழ்மக்கள் நீதி கோரி நின்றார்கள்.

ஆனால் ஐக்கியநாடுகள் மனித உரிமையாளர்உள்நாட்டு பொறிமுறையை ஊக்குவிக்கும் விதத்தில்கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு இந்த விடயத்தில் இயன்ற பல விடயங்களை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில்பல கேள்விகளையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இந்த பொறிமுறையில் எங்களிற்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்.

26ம் திகதி வடகிழக்கு சமூக இயக்கம் ஒரு பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். தமிழ் சிவில் சமூக அமையம் அவர்களிற்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றது.

வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா தெரிவித்துள்ளதாவது

 

இனப்படுகொலை  இடம்பெற்ற செம்மணியை பார்த்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்  ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் வடக்குகிழக்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட  மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கு மறுநாள் இலங்கைக்கான ஐநாவின் நிரந்தரவிதிவிடப்பிரதிநிதி தெரனவிற்கு தெரிவித்த கருத்துக்களும் பாரிய ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது.

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்இகடிதங்களை அனுப்பதிட்டமிட்டுள்ளோம்.

 

26ம் திகதி வடக்குகிழக்கில் உள்ளகபொறிமுறைமீது நம்பிக்கையில் என்பதை தெரிவித்துஇ சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி  நாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளோம்.

யுத்தம் நிறைவடைந்த 16 வருடங்களில் எங்கள் ஆதரவை வெளியிடாவிட்டாலும் உள்ளக பொறிமுறை ஊடாகவும் நாங்கள் நீதியை பெற முயற்சி செய்தோம்.

உள்ளக பொறிமுறை மூலம்  நீதி கிடைக்கும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

குமாரபுரம் தீர்ப்பு உள்ளக பொறிமுறை எவ்வாறு இயங்கும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம்.2016 ஜூலைமாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட அனைவருக்கும் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில்லை. இதனை வெளிப்படுத்தவே ஆர்ப்பாட்டம்.

சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிற்கு சாதகமாக உள்ளதுஇ தங்கமுலாம் பூசப்பட்ட ரி56 துப்பாக்கியை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து விடயங்களும் ஒரு பக்கசார்பாகவே கையாளப்படும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை வெளியில் எடுத்து பொதுச்சபையில் பாரப்படுத்தவேண்டும்.

இலங்கை வேலைவாய்ப்பு

ஆகவேமேற்கூறப்பட்ட காரணங்களால்  இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களிற்காக குரல்கொடுக்கும் சிவில் சமூகத்தினராகிய நாங்களும் சர்வதேச பொறிமுறையை வேண்டிநிற்கின்றோம்.

வெளிநாட்டு தரப்பினர் இது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வதே பொருத்தமாகயிருக்கும்.