அலி ரொஷான் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

73 0

சட்டவிரோதமாக யானை தந்தங்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘அலி ரொஷான் ‘ என்று அழைக்கப்படும் சமரப்புலிகே நிராஜ் ரொஷான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன மற்றும் லங்கா ஜயரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.