50 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் ரஸ்யாவில் மாயம்

78 0

ரஸ்யாவின் தொலைதூரகிழக்கு பகுதியில் 50 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானமொன்று காணாமல்போயுள்ளது.

தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன

சைபீரியாவை சேர்ந்த அங்காராவிமானம் ராடர் திரையிலிருந்து காணாமல்போயுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் சீனா எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தின் டைன்டா நகரை அண்மித்துக்கொண்டிருந்தவேளை விமானம் மாயமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

விமான பயணிகளில் ஐந்து சிறுவர்களும் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.