தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பில் மோதல் வெடித்துள்ளது.
தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்,பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள தாய்லாந்து அதிகாரிகள் எல்லையில் உள்ள 86 கிராமங்களில் வசிக்கும் 40,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இரண்டு தென்கிழக்காசிய நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை தீவிரமடைந்து வந்த நிலையிலேயே நேற்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையின் ஆறு பகுதிகளில் தாய்லாந்துகம்போடிய படையினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன.
இருதரப்பும் பரஸ்பரம் மற்றைய தரப்பே மோதலை ஆரம்பித்தாக குற்றம்சாட்டியுள்ளன.தாய்லாந்தின் தலைநகரிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள
புராதான நகரமான பிரசாத் டா மோன் தொம் என்ற இடத்தில் மோதல்கள் முதலில் ஆரம்பித்துள்ளன.
இதேவேளை கம்போடிய இராணுவத்தின் மீது தாய்லாந்து எவ் 16 தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

