நாரஹேன்பிட்டி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட 397 ஆம் தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தீ விபத்தில் சிக்கி பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பொலிஸாரால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

