சைட்டம் தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

270 0

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நட்டஈட்டையும் பெற்றுக்கொள்ளாமல் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திடம் கையளிக்க பல்கலைக் கழக நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் தனியார் மருத்துவ கல்வி துறையில் முறையான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படும்வரை மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.