இந்தியாவில் 140 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

67 0

இந்தியாவில் 140 பயணிகளுடன் சென்ற விமானம் திங்கட்கிழமை (21) மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானமே தரையிறங்கும் கருவி தொடர்பான தொழில்நுட்ப எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.

தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலைய பணிப்பாளர் விபினகாந்த் சேத்,

கோவாவிலிருந்து புறப்பட்டு சுமார் 25 நிமிடங்கள் கழித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E 813) தரையிறங்கும் கியரில்  பிரச்சனை ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டது. விமான ஊழியர்கள் மற்றும் அனைத்து பயணிகளும்  பாதுகாப்பாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.