எனது கண்முன்னால் இருந்த கட்டிடத்தின் மீது விமானம் மோதியது என மைல்ஸ்டோன் பள்ளி கல்லூரி மாணவரான அவர் பிபிசியின் பெங்காலி செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

பங்களாதேஷ் தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள அந்த பாடசாலையின் இரண்டு மாடிக்கட்டிடத்தின் மீது விமானம் மோதிய பின்னர் தீமூண்டுள்ளதையும் கரும்புகைமண்டலம் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
170 பேர் காயமடைந்துள்ளனர்.
பயிற்சிக்காக புறப்பட்டவேளை எவ்7 ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறினை எதிர்கொண்டதாக பங்களாதேஸின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.அதன் விமானி டாகிர் இஸ்லாமும் உயிரிழந்துள்ளார்.
எனது உற்ற நண்பன் என்னுடன் பரீட்சை எழுதியவன் என் கண்முன்னால் உயிரிழந்தான் என பர்ஹான் தெரிவித்தார்.
“எனது கண்களிற்கு முன்னால் விமானம் அவரது தலைக்கு மேலாக சென்றது இன்று பாடசாலை இறுதி நாள் என்பதால் தங்களின் பிள்ளைகளிற்காக பல பெற்றோர்கள் காத்திருந்தனர்’ என பர்ஹான் தெரிவித்தார்.
‘விமானம் விழுந்து நொருங்கியதில் பெற்றோரும் கொல்லப்பட்டனர்’
விமானம் பாடசாலை கட்டிடத்தை நேரடியாக மோதியதை நான் பார்த்தாக ரெசாவுல் இஸ்லாம் என்ற ஆசிரியை பிபிசிக்கு தெரிவித்தார்.
சத்தமொன்றை கேட்டதாக தெரிவித்த மற்றுமொரு ஆசிரியர் மசூட் தாரிக் சத்தம் கேட்டு திரும்பிபார்த்தவேளை நான் நெருப்பையும் புகையையும் மாத்திரம் பார்த்தேன்,இங்கு பல பெற்றோரும் பிள்ளைகளும் இருந்தனர் என குறிப்பிட்டார்.
பெருமளவு மக்கள் நெருக்கமாக வாழும் அந்த பகுதியில் விபத்தின் பின்னர் என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளின் மாடிகளில் காணப்படுவதை காணமுடிந்தது.
மக்கள் எல்லா திசைகளிலும் ஓடிக்கொண்டிருந்தனர்,மைல்ஸ்டோன் பாடசாலையில் காயமடைந்தவர்களையும் பல உடல்களையும் அகற்றும் நடவடிக்கைகளில் அம்புலன்ஸ் பணியாளர்களும் பொதுமக்களும் ஈடுபட்டிருந்தனர்.

அங்கிருந்து சுமார் 30 அம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு செல்வதை காணமுடிந்தது.
விபத்தின் பின்னர் தனது மகன் தன்னை தொடர்புகொண்டார் ஆனால் அவரை பின்னர் தொடர்புகொள்ளமுடியவில்லை என மகனை தேடிக்கொண்டிருந்த தாய் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
மாணவர்கள் உட்பட 50க்கும் அதிகமானவர்கள் எரிகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர் என எரிகாயங்களிற்கான தேசிய நிறுவகத்தின் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பலரின் குடும்பத்தவர்கள் மருத்துவமனைக்குள் காணப்பட்டனர்,பாடசாலையில் உயிரிழந்த 8 வயது தன்வீர் அகமட்டின் மாமாவான ஷா அலாமும் ஒருவர்,

