ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

73 0

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கைகளானது நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

பேலியகொடை பொலிஸ் பிரிவின் நுகேபார பகுதியில்  112 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேகநபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மட்டக்குளி  பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்டபோது,  355 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 01 கிலோ 465 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள்  மற்றும் 02 கிலோ 30 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, கொத்தட்டுவ பொலிஸ் பிரிவின் கடுகஹவத்த பகுதியில் 10 கிராம் 370 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேகநபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக  நபர் கொத்தட்டுவ  பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடவத்தை பொலிஸ் பிரிவின் கல்வலபார பகுதியில் 07 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.

அத்துடன், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் மல்லிகாராம வீதிப் பகுதியில்  10 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேகநபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் அத்திடிய பகுதியைச்  சேர்ந்த  44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மட்டக்குளி பொலிஸ் பிரிவின் கதிரான பாலம்  பகுதியில்  12 கிராம் 825 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  சந்தேகநபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஸ்டேஸ்வீதி  பகுதியில் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  சந்தேகநபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 32  வயதுடையவராவார்.

இந்த கைது நவடிக்கைகள் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.