53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே அனர்தத்தை சந்தித்துள்ளது.சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமான ஹா லோங் குடாவிற்கு வொன்டர் சீ பயணித்துக்கொண்டிருந்தவேளை புயல்காரணமாக கடலில் மூழ்கியுள்ளது.
11 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் எட்டுபேருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் காற்று காரணமாக படகு தலைகீழாக கவிழ்ந்தது என வியட்நாமின் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன
உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் வியட்நாமியர்கள்
பகல் 2 மணியளவில் வானம் இருண்டது மழைபெய்ய தொடங்கியது இடிமின்னல் கடும் காற்றுடன் மழை பெய்தது என ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைகீழாக கவிழ்ந்த படகிற்குள் சிக்குண்டிருந்த 10 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
நான் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டேன்,கடலில் நீந்தினேன் காப்பாற்றுமாறு அலறினேன் அவ்வேளை என்னை படகொன்று காப்பாற்றியது என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
மீட்கப்பட்ட உடல்களில் 8 சிறுவர்களுடையவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

