அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் சிக்கி, 3 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
கலிபோர்னியாவின், லொஸ் ஏஞ்சலீஸ் நகரத்திலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில்,சில வெடி பொருட்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை (18) பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, திடீரென ஏற்பட்ட வெடிப்பில் 3 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக அங்கு மீட்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
வெடிப்புக்கான காரணம் தெரியவராத போதிலும், சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


