தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பிலியந்தலை மாற்று வீதியில் அமைந்துள்ள கோவிலுக்கு முன்னாலுள்ள வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (18) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இருந்த சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்ற கிடப்பதை கண்டு , உடனடியாக மூத்த பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு ஏற்கனவே ஒரு காரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

