ஹாலிஎல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!

90 0

பதுளை – ஹாலிஎல குயின்ஸ்டவுன் பகுதியில் நேற்று புதன்கிழமை (16) சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குயின்ஸ்டவுன் எஸ்டேட்  கீழ் டிவிசனைச் சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் இரத்தக்காயங்களுடன் கிடப்பதை அப்பகுதி மக்கள் சிலர் கண்டு  ஹாலி எல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்பின்1990 ஆம்பியூலன்ஸ் சேவைக்கு தகவல் வழக்கி அவர்கள் வந்து குறித்த நபரை சோதனையிட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் வெற்றிலை வியாபாரம் செய்பவர் என்றும் அவரது பேர்ஸ் மற்றும் கைத்தொலைபேசி என்பன அங்கிருந்த மரத்தின் கீழ் கிடந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் உயிரிழப்பு சந்தேகத்திற்கிடமாக இருந்தமையால் பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்து நீதிமன்றின் உத்தரவின் பேரில்  சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.