கொழும்பு – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவருக்கு எதிரான வழக்கு மீதான சாட்சிய விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஒத்திவைத்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறைச்சாலையில் உள்ள “ஹரக் கட்டா” பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு மீதான சாட்சிய விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

