சவுதி அபிவிருத்தி நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்து

68 0

இலங்கை அரசாங்கத்திற்கும் சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்திற்கும் (SFD) இடையிலான இருதரப்பு திருத்தப்பட்ட வெளிநாட்டு கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் ஒரு முக்கியமான கட்டமாகும்.

இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின்பக்கம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சக செயலாளர் கலாநிதி ஹர்ஷனா சூரியப்பெருமா மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் ஏ.அல்மர்ஷாத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இலங்கை 2025 ஆம் ஆண்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் சவுதி அபிவிருத்தி நிதியுடன் ஒப்பந்தம் கையெழுத்துவது, நாட்டின் கடன் சுமையை குறைக்கும் விதத்தில் அத்தியாவசியமானது. சவுதி அரேபியா வழங்கிய இந்த கடன்கள் சலுகை அடிப்படையிலானவை என்பதால், இது இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு பெரும் உதவியாக அமைகிறது.

மேலும், இந்த விஜயத்தின் போது சவுதி மேம்பாட்டு நிதியத்தின் கடன் நிதியுதவியுடன் கட்டப்பட்ட ‘வடமேற்கு பல்கலைக்கழக நகர அபவிருத்தி திட்டத்தின்’ திறப்பு விழாவில் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் உயர்மட்டக் குழுவும் பங்கேற்றது.

இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்பில் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரும் முன்னேற்றம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.