ஜப்பானிய கலாசார விழாவில் கலந்துக்கொண்ட கொழும்பு மேயர் விரெய் கெலி பல்தசார்!

89 0

ஜப்பான் தூதரகமும் தேசிய இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பொன் ஒடோரி விழாவில் கலந்து கொண்டு தனது நடனச்செயற்பாடுகளை வெளியிட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாக கொழும்பு மாநகர மேயர் விரெய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு மாநகர மேயர் விரெய் கெலி பல்தசார் தனது சமூக ஊடக பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,

பொன் ஒடோரி விழாவில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இத்தகைய விழாக்கள், நாம் கலாசார பரிமாற்றத்தின் மூலம் உணவுகள், நடனங்கள், மொழி மற்றும் பாரம்பரியங்களை எப்படி அறிந்து இரசிக்க முடிகிறது என்பதை நினைவூட்டுகின்றன.

பொன் ஒடோரி என்பது ஜப்பானில் ஒபோன் காலத்தில் முன்னோர்களின் ஆவிகளை மரியாதையுடன் நினைவுகூரும் பாரம்பரிய விழாவாகும்.

இது சமூகத்துடன் ஒன்றிணையும் மகிழ்ச்சியான நிகழ்வாகும்.அதில் பங்கெடுத்தது எனக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது என மேயர் விரெய் கெலி மேலும் தெரிவித்துள்ளார்.