“ஹரக் பண்டா” ஹெரோயினுடன் கைது

122 0

கிராதுருகோட்டை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் பண்டா” என அழைக்கப்படும் நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான “ஹரக் பண்டா”  நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது அவர் மஹியங்கனை – பதியதலாவ வீதியில் 51வது  மைல் கல்லுக்கு அருகாமையில் உள்ள சந்தி பகுதியில் ஹொரோயின் போதைப்பொருளுடன் இருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான “ஹரக் பண்டா” 5300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ப்ரோபோ டபிள்யூ.டபிள்யூ.எம். விஜேரத்ன தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.