திறப்பனையில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

120 0

அநுராதபுரத்தில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏறுவெவ பிரதேசத்தில்  இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) திறப்பனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திறப்பனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் திறப்பனை, லபுநொருவ பிரதேசத்தில் சேர்ந்த  42  வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெளிநாட்டுத் துப்பாக்கி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.