மஹரகம, நாவின்ன பகுதியில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவின்ன பஸ் நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பஸ் ஒன்று, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான இரு பஸ்களில் ஒரு பஸ் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

