அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு : இரு பெண்கள் பலி, துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை !

40 0

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் லெக்சிங்டன் நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு ஆராதனையின் போது, தேவாலயத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது 72 மற்றும் 32 வயதுடைய இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிதாரி மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த துப்பாக்கிதாரி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.