க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியீடு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

74 0

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் சொத்தாகும்.  உரிய அனுமதியின்றி பரீட்சார்த்திகளுக்கு உரியதல்லாத பெறுபேறுகளை பிரதி செய்தல், தம்வசம் வைத்திருத்தல், இணையத்தளமொன்றிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பதிவேற்றம் செய்தல் அல்லது வேறு வடிவங்களில் பிரசுரித்தல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தண்டனைக்குரிய குற்றமாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.