இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயாகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் அதிகாரி போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 2 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
பின்னர் இந்த பொலிஸ் அதிகாரி குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தை முதலில் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் மீதி 180,000 ரூபா பணத்தை ற்றுக்கொள்வதற்காக சென்றிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

