அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்

93 0

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக  அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் “அருண குமார திசாநாயக்க” என்று தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், இலங்கை அமெரிக்காவின் அசாதாரண பொருளாதாரம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார தடைகளை நீக்கினால் வரி மற்றும் கட்டணங்களை சரிசெய்ய முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நினைவுபடுத்தினார்.

புதிய அறிக்கை ;

 

பழைய அறிக்கை ;