சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (7) மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது.
சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இதன்போது நடைபெற்றது.
அவ்வேளை, படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இந்த கொடூரமான படுகொலை சம்பவத்தின்போது சீருடை அணிந்த, ஆயுதம் தாங்கிய படைகள், பிற்பகல் 2 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன்போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர்.
பின்னர், அவர்களை ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர் எனவும் இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நாட்டின் எந்தவொரு அரசும் இதுவரை உரிய நீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த யுத்த காலத்தில் சம்பூர் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
1. புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி (அதிபர்)
2. இராசேந்திரம் பத்மநாதன் (உயர்தர மாணவன்)
3. பொன்னம்பலம் சச்சிதானந்தகுரு (தரம் 7 மாணவன்)
4. மயில்வாகனம் பிரேமானந்தராஜா (உயர்தர மாணவன்)
5. கோணலிங்கம் சோமேஸ்வரன் (தரம் 7 மாணவன்)
6. மனகசிங்கம் நித்தியசீலன் (தரம் 7 மாணவன்)
7. ச.கனகசிங்கம்
8. கனகசூரியம் சண்முகராஜா (தரம் 10 மாணவன்)
9. ஒப்பிலாமணி இந்திரன்
10. முத்துக்குமார் விஜயகுமார் (தரம் 10 மாணவன்)
11. முத்துக்குமார் விஜயகாந்தன்
12. வைரமுத்து வெற்றிவேல்
13. சங்கரலிங்கம் உதயநாதன்
14. தங்கராசா தில்லைநாயகம்
15. பேச்சுமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்)
16. கணபதி கானசரஸ்வதி
17. க.பேச்சிமுத்து (பரியாரியார்)
18. இ.சொக்கன்
19. இ.ஜெகதீஸ்வரன்
20. இராசேந்திரம் (கூனித்தீவு)
21. இராசேந்திரம் வாமதேவன் (தரம் 10 மாணவன்)
22. சுப்பிரமணியம் விநாயகநேசன்
23. வைரமுத்து சுப்பிரமணியம்
24. கணபதிப்பிள்ளை செல்வராசா (பொலிஸ் உத்தியோகத்தர்)
25. வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை)
26. வைரமுத்து அழகம்மா
27. பொன்னுத்துரை அரசரெத்தினம்
28. பொன்னுத்துரை கதிர்காமத்தம்பி
29. முருகேசுப்பிள்ளை கணேசலிங்கம்
30. பியதாச சோமதாஸ்
31. பியதாச கருணதாஸ்
32. வீ.அரசமணி
33. இ.ரவிநேசன்
34. இ.சிவநேசன்
35. சி.சிங்கராசா
36. சி.கோணலிங்கம்
37. சி.கவிரூபன்
38. கோ.நாகரெத்தினம்
39. ந.அருணாச்சலம்
40. க.யோகநாதன்
41. சித்திரவேல் குணராசா
42. சித்திரவேல் மாணிக்கராசா
43. தாமோதிரம்பிள்ளை சிவகுமார்
44. இ.நிர்மலநாதன்
45. வீரசிங்கம் யோகாம்பிகை
46. வீரசிங்கம் ஜீவசாந்தி
47. பரணி
48. பரமானந்தம்
49. அல்லிராசா (சூடைக்குடா) அவருடைய மகன்கள் இருவர் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த காளி கோவில் பூசகர் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பூரில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.