நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு ; வெலிமடையில் சம்பவம்!

75 0

உமா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

10 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.