ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

34 0

மலையக பகுதிகளில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக, ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் நிவ்வெளி பகுதியில் உள்ள பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (06) பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

விழுந்த மரத்தைச் அப்பகுதியை சேர்ந்த  தோட்டத் தொழிலாளர்கள், நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, மரத்தை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

மரம் விழுந்த பகுதியில் மேலும் பல மரங்கள் விழும் அபாயம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.