செம்மணி புதைகுழி – சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டது தமிழின அழிப்பு நினைவகம் – கனடாவில் இன்று ஆர்ப்பாட்டம்

31 0

செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் பிராம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது.

இதேவேளை செம்மணியில் புதைக்கப்பட்டோர் காணாமல்ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ் மக்களிற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் இன அழிப்பிற்கு நீதிவேண்டியும் மற்றும் தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவும் டன்டாஸ் சதுக்கத்தில் இன்றுகண்ட கவனயீர்ப்பு பேராட்டம் இடம்பெறவுள்ளதாக கனடிய தமிழ் சமூகமும் கனடிய தமிழ் மாணவர் சமூகமும் தெரிவித்துள்ளன.