பதுளை – லுணுகலை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் லுணுகலை பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லுணுகலை, உடகிருவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கண்டேவத்தவின் ஆலோசனையின் பேரில், லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யின் தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

