அநுராதபுரத்தில் உழவு இயந்திரம் விபத்து ; சிறுவன் பலி!

56 0

அநுராதபுரத்தில் அளுத்திவுல்வெவ மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கொகாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (02) மாலை இடம்பெற்றுளள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுளள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் இருந்த சாரதியும் சிறுவனும் காயமடைந்துள்ள நிலையில் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அளுத்திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகாவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.